Oru Patta Potti

ஒரு பட்டா போட்டி
ஒரு பட்டா போட்டி

Reviews

Reviewed: 2017-02-06

அமர்க்களமான காமெடி விருந்து. 

ஓக்லஹோமாவில் சீரியஸாக சொல்லியிருந்த கதையை எக்கச்சக்க நகைச்சுவைகளோடு செம்ம ஜாலியாய் சொல்லியிருக்கிறார்கள். 

 

செவ்விந்திய பெருந்தலைகளிடம் பேரம் பேசி (கண்ணாடி பாசி மாலைகளுக்கு) நிலத்தை வாங்குவதில் தொடங்குகிறது சிரிப்பு. 

எல்லோருக்கும் முன்னதாய் திருட்டுத்தனமாக வாகான இடத்தில் சலூனை கட்டத்துடிக்கும் ஆசாமிக்கு உதவி செய்து கட்டி முடிக்கும்போது அதையே ஜெயிலாக்கி அந்த ஆசாமியையே கைதியாக்கும் போதே லக்கி கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கிவிடுகிறார். 

பாஸ்மார்க் (ஹிஹிஹி! எப்புடி சார் இப்புடி) வண்டி யில் ரோந்து போய் ஊடுறுவல் பேர்வழிகளை அரெஸ்ட் செய்வதிலும் செம்ம லூக் ஸ்டைல்!!!

 

அடுத்ததாக போட்டியாளர்களைப் பற்றி சொல்லியே ஆகணும்.!

போட்டி தொடங்க சில வாரங்கள் ஆகும் எனத்தெரிந்தும் குதிரைமீது தயாராய் ஆடாமல் அசையாமல் நிற்கும் ஸ்பீடி ஜோன்ஸ் காமெடி பீசு என்றால்., ஒலிம்பிக்கில் ஓடப்போவது போல ஒரு காலைத் தூக்கியபடி நிற்கும் அவனது குதிரை டபுள் காமெடி பீசு.!(போட்டி தொடங்கும் போது குறட்டை விட்டபடி தூங்கி போயிடுதுங்க பக்கிக) 

 

சக்கர நாற்காலிக்கு எண்ணெயெல்லாம் விட்டு பந்தயத்துக்கு தயாராகும் தாத்தாஸ் . (ஆனாலும் இவர்தான் முதலில் இடம்பிடிக்கிறார்) 

 

ஏமாளி மொக்கை மோர்கனை யூஸ் பண்ணி இடம் பிடிக்கத்துடிக்கும் வில்லி வில்லன்.

அமாவாசை இருட்டில் கறுப்பு மையை தடவிக்கொண்டு நைசாக உள்ளே நுழைய துடிக்கும் 

ஐயாம் பர்ஸ்ட் ஐசக் (ஹாஹாஹா!! செம்ம பேரு சார்) 

கூவுன சேவலோட குரல் அடங்குறத்துக்குள்ள மசாலா தடவி தீயில் வாட்டும் பெயர் தெரியாத நபர் என போட்டியாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஒவ்வொருவரும் இடம்பிடித்ததும் அயலாரின் அத்துமீறலை தடுக்க போர்டில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் சூப்பரப்பு! (செம்ம சார்)

 

பூம்வில் நகரில் இடம்பிடித்து அவசர கதியில் கட்டிடங்களை எழுப்பவதிலும் காமெடிதான் . பாதையே இல்லாமல் கட்டுவதாட்டும். நுனி மரச்சட்டத்தில் அமர்ந்து கொண்டு நடுச்சட்டத்தை அறுப்பதாகட்டும் (படத்தை கவனிக்கவும்) . ஷலூன் கட்டிமுடிக்கும் முன்னரே ஆர்டர் கொடுக்க தயராக நிற்பதிலாகட்டும் 

கதை மாந்தர்கள் அனைவருமே காமெடிக்கு பொறுப்பேற்கிறார்கள். 

 

மேயர் எலக்ஷன் , தேர்தல் வாக்குறுதிகள் இவற்றை விட ரிசல்ட் செம்ம ரகளை. 

 

சோகமான முடிவுன்னு யாரோ எழுதிய ஞாபகம். (யாரா இருந்தாலும் நினைவில்லை. ஸாரி) . 

செவ்விந்தியர்களிடம் பாசிமணிக்கு வாங்கிய இடத்தை அதே பாசிமணிக்கு அவங்களுக்கே வித்திடுறாங்க. (என்ன கொஞ்சம் குறைச்சலான பாசிமணிக்குத்தான். அதாவது ஒண்ணே ஒண்ணு)

இடம்பிடித்த மக்களோ., வேற இடத்தை பிடிக்க போயிடுறாங்க.! இதில் சோகமெல்லாம் ஒண்ணுமில்லீங் சார். (வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்ல வரேன்) . 

 

இன்னும் குறிப்பிட நிறைய இருந்தாலும் , இதுவே போரடிச்சிடுமோன்ற பயத்தோட., இத்தோட நிப்பாட்டிக்கிறேன். 

 

மொத்தத்துல மிக நிறைவான மறுவாசிப்புகளுக்கு (பலமுறை) மிகத் தகுதியான மற்றொரு லக்கி லூக் சாகசம்.!!!

Item Posts
No posts